மும்பை,
ரூபாய் 500, 1000 நோட்டுகளை வாங்க மறுத்து, சரியான சிகிச்சை அளிக்காததால் பிறந்த குந்தை மரணத்தை நாடியது. இந்த பரிதாபகரமான சம்பவம் மும்பையில் நடைபெற்றுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபிறகு ஏற்பட்ட குழப்பங்களில், சாமானிய மக்கள், வியாபாரிகள், விவசாயிகளுடன் ஒரு பச்சிளம் குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள ஜீவன்ஜோதி நர்சிங்ஹோம் என்ற மருத்துவமனையில் அந்த பகுதியை சேர்ந்த சர்மா. அவரது மனைவு கிரண், கர்ப்பிணி. இவர் கடந்த ஏப்ரல் மாதம்முதல் தொடர்ந்து மகப்பேறு மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளார்.
நவம்பர் 8-ம்தேதி மோடி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததார். அன்றைய தினமும் கிரண்  வழக்கமான பரிசோதனைக்கு சென்றுள்ளார்.
கிரணைப் பரிசோதித்த மருத்துவர்கள் டிசம்பர் 7-ம்தேதி அன்று குழந்தை பிறக்கலாம் என்று உறுதி அளித்துள்ளனர்.
ஆனால் கடந்த 9ந்தேதியே கிரணுக்கு வலி ஏற்பட, உறவினர்கள் உதவியுடன் வீட்டிலேயே  குழந்குதை பிறந்துள்ளது.  ரணுக்கு தொடந்து ரத்தப்போக்கும் இருந்துள்ளது. குழந்தை மிகவும் எடை குறைவாக 1.6 கிலோ எடையே இருந்துள்ளது.
கிரணுக்கும் ரத்தப்போக்கும் நிற்காததால், பயமடைந்த கிரணன் உறவினர்கள் அவரை ஏற்கனவே பரிசோதனை செய்து வந்த ஜீவன்ஜோதி நர்சிங்ஹோமில் சேர்த்துள்ளனர்.

குழந்தையை பறிகொடுத்த சர்மா-கிரண் தம்பதி
குழந்தையை பறிகொடுத்த சர்மா-கிரண் தம்பதி

மருத்துவமனையில் குழந்தைக்கு முதல்கட்ட சிகிச்சையளித்த மருத்துவர்கள், அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக 6,000 ரூபாய் கட்டணமாக கேட்டுள்ளனர். 500, 1000 ஆயிரமாக கட்டக்கூடாது, 100 ரூபாய் தாளாக பணத்தை கட்டுங்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் கோரியுள்ளது.
ஆனால், கிரணின் கணவர் சர்மா,  தன்னிடம்  500 ரூபாய் தாள்கள் மட்டுமே இருப்பதாகவும், சில்லரை கிடைத்தவுடன் 100 ரூபாய் தாளாக கட்டிவிடுவதாகவும் கூறியுள்ளர். ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ, பணத்தை கட்டினால் மட்டுமே சிகிச்சை தொடர முடியும் என்று கறாராக கூறிவிட்டனர்.
ஆனால், கடந்த 9, 10ந்தேதி ஏடிஎம் மூடப்பட்டிருந்ததால், சர்மா என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். 500 ரூபாய்தாள்களை 100 ரூபாய்தாள்களாக மாற்ற முடியாமல் சர்மாவின் குடும்பத்தினர் தவித்தனர்.
ஆனால், அவர்களின் தவிப்பை பொருட்படுத்தாக மருத்துவமனை நிர்வாகம் கல்மனசுடன், அந்த பச்சிளங்குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, மருத்துவமனையைவிட்டு வெளியேற்றியது.
இதனால் வீட்டிற்கு திரும்ப சர்மா குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர். மறுநாள் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், சர்மாவும் கிரணும் வேறு ஒரு மருத்துவமனைக்கு குழந்தையைத் தூக்கிச்சென்றனர்.
ஆனால் போகும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகமோ ஆணவமாக பதில் கூறி உள்ளது.
” குழந்தைக்கு முதன்மை பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஆனால் அவர்களிடம் செல்லாமல் போன 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்தன. செல்லாத நோட்டுகளை வாங்கிக்கொண்டு எப்படி சிகிச்சை அளிக்கமுடியும்? ‘அத்துடன் உயர் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் எங்களிடம் இல்லாததால், வேறு மருத்துவமனைக்குப் போகச்சொன்னோம்” என ஜீவன் ஜோதி நர்சிங் ஹோம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், மத்திய அரசோ, மருந்தகம்,  மருத்துவ மனைகளில் 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை கட்டாயம் ஏற்க வேண்டும் என  தெளிவான வழிமுறைகளை  கொடுத்துள்ளது.
அப்படி இருந்தும் மருத்துவமனையின் அலட்சியத்தில் ஒரு பச்சிளங்குழந்தை உயிரிழந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு….? மத்திய அரசா, மருத்துவமனை நிர்வாகமா என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.