மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி  ஆட்சிக்கு வந்தால் குடிசை பகுதி மக்களுக்கு 500 சதுர அடியில்  வீடு கட்டித்தரப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு 10 நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் தேர்தல் பரப்புரைகள், கூட்டணிகள் அமைப்பது, தொகுதி பங்கீடு பணிகிள்  தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்களை தொடங்கி உள்ள நிலையில், நேற்று மும்பையில் காங்கிரஸ் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  குடிசை பகுதிகள் நிறைந்த   பாந்திரா குர்லா பகுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட் டத்தில் கலந்துகொண்ட  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது,

மோடி அரசை கடுமையாக விளாசிய ராகுல், பாஜக ஏழை மக்களை கண்டுகொள்ளாது, அது  தொழிலதிபர்களுக்கான கட்சி என்றார். காங்கிரஸ் கட்சியானது பாரதிய ஜனதா கட்சி (பி.ஜே.பி) போலல்லாமல், ஏழைகளின் நலனில் காங்கிரஸ் அக்கறை கொண்டுள்ளது என்றார்.

பிரதமர் மோடி ஒரு பொய்யர் என்று விளாசிய ராகுல், எங்களுக்கும் புரட்சிகரமான நடவடிக்கை களை எடுக்கத் தெரியும் என்றவர், காங்கிரஸ் அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி அறிவிக்கப்படும்.  சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ள  ராஜஸ்தான்,  மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்ததை போல மராட்டியத்திலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

ஆட்சிக்கு வந்த 10 நாட்களுக்குள் இதற்கான முடிவுகள் அறிக்கப்படும் என்றவர், பிரதமர் நரேந்திர மோடி  நான் பொய் சொல்லவில்லை. என் சொல்லை நினைவில் கொள்ளுங்கள், தற்போது நீங்கள் வசித்து வரும் 300 சதுர அடி வீடு500 சதுர அடி அளவுகளில் கட்டித்தரும் என்றும் உறுதி அளித்தார்.

அது பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய மக்களின் வங்கி கணக்கில் குறைந்தபட்ச உத்தரவாத வருவாய் வழங்கப்படும் என்றவர், பிரதமர் மோடி நமது நாட்டு வீரர்களின் தியாகங்களை அரசியலாக்கி வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

இவ்வாறு ராகுல் பேசினார்.