500வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!!

கான்பூர்:

ந்தியா, நியூசிலாந்துக்கிடையேயான டெஸ்போட்டி கான்பூரில் நடைபெற்றது. 500வது டெஸ்ட் போட்டியான இந்த போட்டியில்,  தமிழகத்தை சேர்ந்த பந்துவீச்சாளர் அஸ்வின் 200விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த போட்டியில் நியூசிலாந்து 197 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்து மகுடம் சூடியுள்ளது.

cricket

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் 22ம் தேதி தொடங்கியது. இந்தியா முதல் இன்னிங்சில் 318 ரன் எடுத்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 262 ரன்னுக்கு சுருண்டது.

56 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 377 ரன்னில் டிக்ளேர் செய்தது. 434 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 3 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. லதாம் 2 ரன்னிலும், மார்ட்டின் கப்தில் ரன் கணக்கை துவக்காமலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

நேற்றைய ஆட்ட நேர இறுதியில் நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன் எடுத்து இருந்தது. இன்று 5வது நாள் ஆட்டம் நடந்தது. ரோஞ்சியும், சான்ட்னரும் நிதானமாக விக்கெட்டுகளை காப்பதில் குறியாக இருந்தனர். ஆனாலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். நியூசிலாந்து அணி 158 ரன் எடுத்து இருந்தபோது ரோஞ்சி 80 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதனையடுத்து வாட்லிங் (18), மார்க் கிரேய்க் (1) அடுத்தடுத்த சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மதிய உணவு இடைவேளையின்போது நியூசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்து இருந்தது.

உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கியதும் மேற்கொண்டு 31 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து பறிகொடுத்து 236 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 197 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

அஸ்வின் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கார்ட்டூன் கேலரி