ஜிபிஎஸ் வசதியுடன் 5ஆயிரம் பேருந்துகள்: போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கார்

சென்னை:

மிழகத்தில் ஜிபிஎஸ் வசதியுடன் 5000 பேருந்துகள் அரசு போக்குவரத்து துறைக்கு வாங்கப்படும் என்று தமிழக போக்குவத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இன்று 29வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி தமிழகம் முழுவதும் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று முதல் வரும் 30ந்தேதி வரை நடைபெற்ற உள்ள இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக, சென்னையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு  போக்குவத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தலைமை ஏற்றார்.

சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி விக்டோரியா போர் சின்னம் வரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது,

“தமிழகத்தில் சாலை விபத்துகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். ஏற்கனவே கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது பெருமளவில் குறைந்துள்ளது என்று கூறினார்.

மேலும், தமிழக போக்குவரத்துறையின் பயன்பாட்டுக்காக ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய 5 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டதாகவும், இதில் தறபோது 2000 பேருந்துகள்  வாங்கப்பட்டுள்ளன. மேலும் 3000 பேருந்துகள் வாங்கப்பட இருப்பதாகவும் கூறினார்.

You may have missed