சென்னை:
ரசு வேலைகளுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுவதற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு தேவையான பணியாளர்களை எழுத்து தேர்வு மூலமும், நேர்முக தேர்வு மூலமும் நியமனம் செய்து வருகிறார்கள்.
tnpsc
அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், வெவ்வேறு வகையான பணியிடங்களுக்கு தகுந்தாற்போல்  அதற்கு தேவையானவர்களை  தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதற்கான தகுதி தேர்வை, வேலைக்கு தகுந்தார்போர் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 என தனித்தனியாக ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு, தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள சுமார் ஐந்தாயிரம் பணியிடங்களை நிரப்ப  அரசு முடிவு செய்துள்ளது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிரேடு-3, நிலஅளவர்,  நில பட வரைவாளர் போன்ற பணிளை நிரப்ப நடத்தப்படுவதுதான் குரூப்-4 தேர்வு.
இந்த தேர்விற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி பத்தாம் வகுப்பு போதுமானது.  அத்துடன் டைப்ரைட்டிங், சார்ஹேன்ட் போன்ற தொழிற்கல்வி பயிற்சி முடிந்திருப்பவர்கள் எளிதில் வேலையை பெற முடியும்.
ஏற்கனவே ஜூலை மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய இந்நத குரூப்-4 தேர்வு, தமிழக சட்டசபை தேர்தலால் தள்ளி போனது. அதனால் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.