அமித் ஷா உள்ளிட்ட 503 மக்களவை உறுப்பினர்கள் சொத்து விவரங்கள் அளிக்கவில்லை : அதிர்ச்சி தகவல்

டில்லி

மைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 503 மக்களவை உறுப்பினர்கள் தங்கள் சொத்து விவரங்களைத் தெரிவிக்கவில்லை என தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

2004 ஆம் வருட மக்களவை சட்ட விதிகளின்படி  ஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் தேர்வு செய்யப்பட்ட அல்லது பதவி ஏற்ற 90 நாட்களுக்குள் தங்கள் சொத்து விவரங்களை அளிக்க வேண்டும்.   இந்த விவரங்களில் அவர்களிடம் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கல், மனைவி மற்றும் சிறு குழந்தைகள் ஆகியோரின் சொத்துக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் உள்ளிட்ட அனைத்தும் உள்ளடங்கும்.

இது குறித்து காசிப்பூர் வாசியான நதிமுதீன் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்ட கேள்வியில், எத்தனை உறுப்பினர்கள் இதுவரை தங்கள் சொத்து விவரங்களை அளித்துள்ளனர் என கேட்டுள்ளார்.   இதற்கு அளிக்கப்பட்ட பதிலில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் 10 ஆம் தேதி வரை 543 உறுப்பினர்கள் சொத்து விவரங்கள் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் 36 உறுப்பினர்கள் மட்டுமே விவரங்கள் அளித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

சொத்து விவரங்கள் அளித்த 36 பேரில் பாஜகவினர் 25 பேரும், திருணாமுல் காங்கிரசார் 8 பேரும் பிஜு ஜனதா தளம், அதிமுக, மற்றும் சிவசேனா ஆகிய கட்சியினர் தலா ஒருவரும் அடங்குவர்.   சொத்து விவரங்களை பிரதமர் மோடி, அமைச்சர்கள் ரமேஷ் போக்கிரியால் நிஷான்க், ஸ்மிரிதி இராணி, மற்றும் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் அளித்துள்ளனர்.

சொத்து விவரங்கள் அளிக்காத 543 பேரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மல சீதாராமன், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்குவர்.