டில்லி,
நாளை முதல் (நவம்பர் 11) இந்தியாவில் உள்ள அனைத்து ஏடிஎம் இயந்திரத்திலும் 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
நவம்பர் 11 முதல் ஏ.டி.எம்.களில் 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
atm-with50
கடந்த 8ந்தேதி இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
இதனால் நாடு முழுவதும் உள்ள  ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்  பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளுக்கு திடீரென பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அன்றாட வாழ்க்கை நடத்தவே  மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர்.
நேற்றும், இன்றும் ஏடிஎம் இயந்திரங்கள் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இன்று முதல்  நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலக மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு, பழைய நோட்டுகளுக்கு பதிலாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆகையால் மக்கள் வங்கிகளுக்கு சென்றே புதிய நோட்டுகளை வாங்கி வருகிறார்கள். இதன் காரணமாக வங்கிகள் மற்றும் அஞ்சலக மையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது.
இரண்டு நாளுக்கு பிறகு, நாளைதான்  நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம் மையங்கள்  செயல்பாட்டுக்கு வருகின்றன.
இந்நிலையில் நாளை முதல்  ஏ.டி.எம் மையங்களில் இருந்து 100, 50 ரூபாய் நோட்டுகளை மக்கள் எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
இதுவரை அனைத்து ஏ.டி.எம்-களில் குறைந்த தொகையாக ரூ.100 மட்டுமே எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.