இத்தாலி : 51 மருத்துவர்கள் கொரோனாவால் மரணம்

--

ரோம்

கொரோனா தாக்குதலால் இத்தாலியில் 51 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகையே பீதியில் ஆழ்த்தி உள்ளது.

உலகெங்கும் தற்போது 6.15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சீனாவை விட இத்தாலி நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.04 லட்சத்தைத் தாண்டி உள்ளது.

இத்தாலியில் 86,498 பேர்  பாதிப்பு அடைந்து 9134 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பலரும் மருத்துவர்களை நம்பி உள்ளனர்.

ஆனால் இத்தாலியில் 51 மருத்துவர்கள் கொரோனா தாக்குதலில் மரணம் அடைந்துள்ளனர்.

இதை இத்தாலி மருத்துவர்கள் சங்கம் உறுதிப்படுத்தி உள்ளது.