டில்லி

காவல்துறையின் உயர் அதிகாரிகளில் 515 பேர் தங்களது வருடாந்திர சொத்துக் கணக்கை இன்னமும் அரசுக்கு அளிக்காமல் உள்ளனர்.

அகில இந்திய பணி விதிமுறைகளின் படி அனைத்து காவல் துறை உயர் அதிகாரிகளும் (ஐ பி எஸ்) தங்களுடைய சொத்து விவரங்களை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அளித்தாக வேண்டும்.   ஒவ்வொரு ஆண்டுக்கான கணக்குகளும் இவ்வாறு அதிகாரிகளால் அளிக்கப்பட்டு வருகிறது.   இந்த விவரங்களை அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அளிக்க வேண்டும்.

சென்ற 2016ஆம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கை இதுவரை 515 அதிகாரிகள் அளிக்கவில்லை.    இந்த அதிகாரிகள் நாடெங்கும் உள்ள பல மாநிலங்களில் டிஜிபி, ஐஜி போன்ற பணிகளில் உள்ளவர்கள் ஆவார்கள்.   சட்டத்தை பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிகளே சட்டப்படி சொத்துக் கணக்கை அளிக்காதது மத்திய உள்துறை அமைச்சகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த தகவலை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சகம் அந்தந்த மாநில மற்றும் யூனியன்  பிரதேச அரசுகள் இந்த அதிகாரிகளிடம் உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும் எனக் கூறி உள்ளது.