கோவாவில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் முடிவடைந்தது.

சினிமா வரலாற்றில், நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் இரு தளங்களில் ‘கலப்பு’ முறையில் நடந்த முதல் விழா இது வாகும். நிறைவு நாளில் சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.

சிறந்த படத்துக்கு அளிக்கப்படும் முதல் பரிசான ‘தங்கமயில்’ விருது டென்மார்க் படமான ‘இன் டு தி டார்க்னெஸ்’ என்ற படத்துக்கு வழங்கப்பட்டது.

மத்திய அரசும், கோவா மாநில அரசும் இணைந்து நடத்திய இந்த விழாவில், இந்தியாவுக்கு ஒரே ஒரு பரிசு மட்டும் கிடைத்துள்ளது.

‘பிரிட்ஜ்’ என்ற அசாம் திரைப்படம், சிறந்த நடுவர், விருதை தட்டிச்சென்றது.

ஜீனத் அமன்

நிறைவு நாளான நேற்று இந்தி நடிகை ஜீனத் அமன், கவுரவிக்கப்பட்டார்.

அவருக்கு கோவா முதல்-அமைச்சர் பிரமோத் சாவந்த், பொன்னாடை போர்த்தி பராட்டினார்.

– பா. பாரதி