பீகார் சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தலில் 52.24% வாக்குப்பதிவு

பாட்னா

ன்று நடந்த பீகார் சட்டப்பேரவை முதல் கட்ட வாக்குப்பதிவில் 52.24% வாக்கு பதிவாகி உள்ளது.

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்று தொடங்கி உள்ளது.

இன்று நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் 71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்துள்ளது.

இதில் இன்று மாலை 5 மணி வரையில் 52.24% வாக்குகள் பதிவாகி உள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவில் 54.94% வாக்குகள் பதிவாகின.

மக்களவை  தேர்தலில் 53.54% வாக்குகள் பதிவாகின.

இந்த தகவல்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.