திருவள்ளூரில் இன்று (06/05/2020) மேலும் 52 பேருக்கு கொரோனா…
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று புதிதாக மேலும் 52 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,176 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ்பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில், புதிதாக 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,693 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9,459 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 220 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 167-ஆக உள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு ஏற்கனவே 1,124 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்றும் மேலும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,176 ஆக உயர்ந்துள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 645 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.