இன்று மேலும் 52 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1937ஆக உயர்வு

சென்னை:

மிழகத்தில்  இன்று மேலும் 52 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இன்று பாதிக்கப்பட்டுள்ள 52 பேரில் 47 பேர் சென்னையைச்சேர்ந்தவர்கள்.

மதுரையைச் சேர்ந்தவர்கள்  4 பேர், விழுப்புரத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உளளது.

இன்று  81 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1101 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று வரை செயலில் உள்ள கொரோனா நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கை 809 ஆக உள்ளது,

அதே நேரத்தில் இந்த வைரஸ் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.