மும்பை

மும்பை மாநகராட்சி குடியிருப்புக் கணக்கு மையம் முழுவதுமாக முடிக்கப்பட்டும் பாதிக்கு மேற்பட்ட கட்டிடங்கள் விற்கப்படவில்லை என கூறி உள்ளது

மும்பை நகரில் வீட்டு வசதிக் குடியிருப்புக்களுக்கு எப்போதுமே நல்ல விற்பனைச் சந்தை உள்ளது என பொதுவாக பலரும் அபிப்ராயம் கொண்டுள்ளனர்.   எந்த ஒரு குடியிருப்புத் திட்டமும் அறிமுகப்படுத்தப் பட்ட உடனேயே விற்பனை முடிந்து விடுவதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் சொல்லி வருகின்றனர்.   ஆனால் உண்மை நிலை வேறாக உள்ளது

மும்பை மாநகராட்சி குடியிருப்புக் கணக்கு மையம்  சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி மும்பையில் உள்ள குடியிருப்புகளில் முழுவதுமாக முடிந்த குடியிருப்புக்களில் 52% இன்னும் விற்பனை ஆகாமல் உள்ளது.   மொத்தம் கட்டி முடிக்கப்பட்ட 6,70,339 குடியிருப்புகளில் தற்போது 3,50,713 குடியிருப்புக்கள் விற்கப்படவில்லை.   இதற்கு முக்கியக் காரணம் விலை உயர்வே எனக் கூறப்படுகிறது.   பெங்களூர், டில்லி, பூனே நகரங்களுடன் ஒப்பிடும் போது இந்த விற்கப்படாத கட்டிடங்கள் 10% முதல் 15% அதிகமாக உள்ளது.

இந்த குடியிருப்புக்களில் ஒன்று மற்றும் இரண்டு படுக்கையறைகள் கொண்ட குடியிருப்புக்களில் 85% விற்பனை ஆகாமல் உள்ளன.  தற்போது கட்டப்பட்டு வரும் ஒரு படுக்கையறைக் குடியிருப்புகள் 3,00,049 ஆகும்.  அதில் 1,56,048 இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளன.  அதே போல் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட குடியிருப்புக்கள் 2,87,450 குடியிருப்புக்களில் 1,52,349 இன்னும் பதிவு செய்யப்படாத நிலையில் உள்ளன.  இவைகளின் கட்டுமானப்பணி வரும் 2020ல் முடிந்து விடும் என எதிர்பார்க்கப் படுவதால் அப்போது விற்கப்படாத குடியிருப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.