டில்லி

ந்தியா முழுவதுமாக கொரோனா வைரஸ் சோதனைக்காக 52 சோதனை நிலையங்களும் 57 மாதிரிகள் சேகரிக்கும் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளிலும் பரவி உள்ளது.    அவ்வகையில் இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று சுமார் 31 பேரைப் பாதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் நேற்றுவரை 3404 பேர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட 4058 இரத்த மாதிரிகள் சோதனைச் சாலையில் சோதிக்கப்பட்டுள்ளன.  இதில் 1308 மாதிரிகள் சீனாவில் வுகான் நகரில் இருந்து வந்த 654 பேருடையதாகும்.  இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கோவிட் 19 நோயாளிகள் 31 பேர் கண்டறியப்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.  தனால் நாடெங்கும் 52 சோதனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.  அத்துடன் இரத்த மாதிரிகள் சேகரிக்க 57 சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.