ஒரே நாளில் 52,123 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 15, 83,792 ஆக உயர்வு…

டெல்லி:

த்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை (வியாழக்கிழமை)  வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 52,123 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம், நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 15, 83,792 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 775 பேர் கொரோனாவிலிருந்து இறந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை  34,968 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை, 10,20,582 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். மீட்பு விகிதம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது, மேலும் இது 64.43% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, நாட்டில் 5,28,242 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.