வெளியிலிருந்து தமிழகம் திரும்பிய 54 பேருக்கு கொரோனா!

--

சென்னை: பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எத்தனை பேர், எந்தப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்ற விபரங்களும் வெளியாகியுள்ளன.

மராட்டியம் – 35 பேர்

குஜராத் – 6 பேர்

துபாய் – 5 பேர்

தெலுங்கானா – 3 பேர்

டெல்லி – 2 பேர்

உத்திரப்பிரதேசம் – 2 பேர்

கேரளா – 1

இந்தியாவிலேயே மராட்டிய மாநிலம்தான் அதிக கொரோனா தொற்று நோயாளிகளைக் கொண்ட மாநிலமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், அங்கிருந்து வந்தவர்களில் அதிகபட்சமாக 35 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.