திரிச்சூர்: கோயில் திருவிழாக்களுக்கெல்லாம் தாய் என அழைக்கப்படுகிற கேரள மாநில திரிச்சூரின் பூரம் திருவிழா, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் தொடங்கியது.

இந்த விழாவை, சர்ச்சைக்குரிய 54 வயது யானையான தெச்சிக்கோட்டுகாவு ராமச்சந்திரன் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இந்த யானையின் உடல்நலனைக் காரணம் காட்டி, விழாவில் பங்கேற்க அதிகாரிகள் மறுத்து வந்தார்கள்.

கேரளாவின் உயரமான யானையான 54 வயது ராமச்சந்திரன், ஆயிரக்கணக்கான மக்களின் மகிழ்ச்சி ஆரவாரங்களுக்கு இடையே, வடக்கும்நாதன் கோயிலின் தெற்கு வாயிலை திறந்து வைத்தது.

இந்த 2019ம் ஆண்டில், மே 13ம் தேதி திரிச்சூர் பூரம் வருவது கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும், பூரம் திருவிழா என்பது, 10.5 அடி உயரமுள்ள யானையால், கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டு தொடங்கப்படும். அப்போது நெய்திலாக்கவிலாம்மா சிலை உச்சியில் இருக்கும்.