பாராளுமன்றத்தில் 545 எம்.பி.க்களில், 5 எம்.பி.க்கள் மட்டுமே 100% வருகை!

டில்லி:

டந்த மூன்றாண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் மொத்தமுள்ள 545 எம்.பி.க்களில் வெறும் 5 எம்.பிக்கள் மட்டுமே 100 சதவிகித வருகையை பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடரில் கடந்த 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை கலந்துகொண்ட வர்கள் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்குபெற்ற உறுப்பினர்களின் வருகை பதிவு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய பாராளுமன்றத்தில் 545 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 5 எம்.பிக்கள் மட்டுமே அனைத்து கூட்டத்தொடரிலும் பங்குபெற்று 100 சதவிகித வலுகை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது வெறும் 9 சதவிகிதம் மட்டுமே.

பாந்தா பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் பைரோன் 100% வருகையுடன் அதிகபட்சமாக 1468 விவாதங்களில் பங்கேற்று முதலிடத்தில் உள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 59% வருகையை பதிவு செய்துள்ளார். ஆனால், அவரது மகன் ராகுல் காந்தி 54% வருகை மட்டுமே பதிவு செய்துள்ளார்.

பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்களின் வருகைப்பதிவேடுகள் சரியாக பதிவு செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது.  அவர்களுக்கு மற்றும் எதிர்க்கட்சி தலைவருக்கு இந்த நடைமுறை யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பா.ஜ.க எம்.பி வினோத்கண்ணா 50% வருகை பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த எம்.பி.யான அன்புமணி ராமதாஸ் 45% வருகையும், தற்போதைய பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் 6% வருகையும், தற்போதைய காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி 35% வருகையையும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.