பிரேசிலை வேட்டையாடும் கொரோனா… ஒரே நாளில் புதிதாக 54,771 பேருக்கு பாதிப்பு…

பிராசிலயா:

பிரேசில் நாட்டில் கொரோனா தொற்று மிகத்தீவிரமடைந்து உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில்  புதிதாக 54,771 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில்  அமெரிக்காவை அடுத்து 2வது இடத்தில் பிரேசில்உள்ளது. அங்கு இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை  தாண்டி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி பிரேசில் நாட்டில் 10 லட்சத்து 38 ஆயிரத்து 568 பேருக்கு கொரோனா பரவி இருப்பது உறுதியாகி உள்ளது.  குறிப்பாக நேற்று ஒரே நாளில் 54,771  பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று மட்டும் 1,221 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் பிரேசிலில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை  லட்சத்தை தாண்டியுள்ளது.