இன்று (25/05/2020) 549 பேர்: சென்னையில் 11,000 ஐ தாண்டியது கொரோனா…

சென்னை:

மிழகத்தில் இன்று ஒரேநாளில் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இன்று பாதிக்கப்பட்டுள்ள 805 பேரில்  549 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  11,125 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை  10,576 ஆக அதிகரித்திருந்தது. இன்று மேலும் 549 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 11,125 ஆக அதிகரித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி