மும்பை:

அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்காக 54 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட இருப்பதாக மகாராஷ்ட்ர அரசு தெரிவித்துள்ளது.


சிவசேனா எம்எல்ஏ மணிஷா கயாந்தே எழுப்பிய கேள்விக்கு மகாராஷ்ட்ர மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் திவாகர் ராவுட்டே எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்காக, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 13.36 ஹெக்கேடர் பரப்பளவில் அமைந்துள்ள 54 மரங்களுடன் உள்ள சதுப்பு நிலக் காடுகள் அழிக்கப்படும்.

புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தியபிறகு, 5 மடங்கு மரங்கள் வளர்க்கப்படும். புல்லட் ரயில் திட்டத்துக்காக பெரிய தூண்கள் வரும் இடங்களில் மட்டுமே மரங்கள் வெட்டப்படும்.

புது மும்பை பகுதியில் சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்படாது. எனவே,அப்பகுதிக்கு வெள்ள அபாயம் இல்லை.

இந்த திட்டத்தால் பாதிக்கப்படுவோருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தும். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார்.