தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55.97  சதவீத வாக்குகள் பதிவு

சென்னை:

மிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 3 மணி வரை  52.02 சதவீதமும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தமிழக தேர்தல்ஆணையம் சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்பட நாடு  இன்று முழுவதும்  95 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில்  காலை முதலே பல பகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பிற்பகல் மணி நிலவரப்படி, தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் பதிவான வாக்குகளின் விவரம்.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55.97  சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

குறைந்த பட்சமாக மத்திய சென்னையில் 45.65 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. சட்டமன்ற இடைத்தேர்தலில் 55.97 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.