புதிய 555 அரசு பேருந்துகள் பேருந்துகளின் சேவை: முதல் எடப்பாடி தொடங்கினார்

சென்னை:

மிழகத்தில் இன்று புதிய  555  அரசு பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர், தமிழக போக்குவரத்து துறைக்கு புதிதாக 2ஆயிரம் பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து முதல் கட்டமாக  கடந்த ஆண்டு அக்டோபர் 10ந்தேதி 471 புதிய பேருந்துகளின் சேவைகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் தற்போது 555 புதிய பேருந்து சேவைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து  இன்று தொடங்கி வைத்தார்.

இந்த பேருந்துகளில் சென்னைக்கு 56 பேருந்துகள் உள்பட , விழுப்புரம் மாவட்டத்திற்கு  82 பேருந்துகளும், சேலம் மாவட்டத்திற்கு  112 பேருந்துகள், கும்பகோணத்துக்கு 102, கோவை மாவட்டத்துக்கு  140, மதுரைக்கு  63 பேருந்துகள் என மொத்தம் 555 பேருந்துகளின் சேவையை இன்று தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.