Random image

இந்தியாவில் 56 கோடி இணைய இணைப்பு: கடந்த 2 ஆண்டில் தமிழகத்தில் 45% அதிகரிப்பு

டில்லி:

ணைய இணைப்பில் இந்தியா ஜெட் வேகத்தில் முன்னேறி வருகிறது.இதுவரை 56 கோடி இணைய  இணைப்புகள் கிடைக்கப்பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை கடந்த 2016ம் ஆண்டு இருந்த இணைய இணைப்பை விட தற்போது 45 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாக டிராய் தெரிவித்து உள்ளது.

இன்றைய டிஜிட்டல் உலகில் இணைய இணைப்பு இல்லையென்றால் பெரும்பாலானோர் வாழ்க்கையையே வெறுத்து விடுவார்கள். அந்த அளவுக்கு  ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இணையம் இன்றியமையாததாகி வருகிறது.

வங்கி பரிவர்த்தனை உள்பட பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பரிவர்த்தனைகளுக்கும் இணையத்தின் தேவை அவசியமாக உள்ளது. இந்த நிலையில், நகரங்களில் இணைய இணைப்புகள் அதிக அளவில் கிடைக்கும் நிலையில்,  இன்னும் பெரும்பாலான கிராமப்புற பகுதிகளில் இணைய வசதிகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் நீடித்து வருகிறது.

இதுதொடர்பாக மெக்கின்சி நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகையில் இன்னும் 440 கோடி பேர் இணைய வசதியை பெற முடியாத நிலை நீடித்து வருவதாக தெரிவித்து உள்ளது.

மோடி அரசு இந்தியாவில் 2018ம் ஆண்டுக்கள் 50 கோடியை எட்டும் என அறிவித்து அதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது இணைய இணைப்புகள் இந்தியாவில் 50 கோடியை எட்டி இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடநத்  2016ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி இந்தியாவில் 34 கோடி இணைய இணைப்புகள் இருந்தன. இது 2017ம் ஆண்டு  மார்ச் நிலவரப்படி 42 கோடி இணைய இணைப்புகளாக உயர்ந்த நிலையில், 2018 மார்ச் மாத நிலவரப்படி 49 கோடி இணைய இணைப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அளித்து உள்ள தகவலின்படி, கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, இந்தியாவில் 56 கோடி இணைய இணைப்பு கள் இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இந்த 56 கோடி இணைப்புகளில், 64% அதாவது 36 கோடி இணைப்புகள் நகர்ப்புறங்களிலும், 36% இணைப்புகள் ஊரகப் பகுதிகளிலும் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவிலயே அதிக அளவிலான இணை இணைப்புகள் பெறும் மாநிலங்களில் கர்நாடகம், ஆந்திரா, தமிழகம், குஜராத், தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிங்களில் மட்டும் 20 கோடி இணை இணைப்புகள் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நிலவரத்தை ஒப்பிடும்போது தற்போது சுமார் 45 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகவும் டிராய் தெரிவித்து உள்ளது.