14 நாட்களில் 56000 பேருக்கு பாதிப்பு ஏற்படும் : டெல்லி சுகாதார அமைச்சர்

டெல்லி :

டெல்லியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைவசதிகள் இல்லாததால், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் இனி டெல்லி மாநிலத்தவர்களுக்கே சிகிச்சையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாலும், அண்டை மாநிலங்களில் பாதிப்பு குறைவாக இருப்பதாலும், டெல்லி மருத்துவமனைகளில் டெல்லி மாநிலத்தவர்க்கே முன்னுரிமையளிக்கப்படும் என்று கூறினார்.

மேலும், டெல்லியில் 8500 முதல் 9000 படுக்கைகள் மட்டுமே தற்போது உள்ளது, இதனை இன்னும் 15 நாட்களில் 15000 முதல் 17000 வரை உயர்த்த இருக்கிறோம், டெல்லியில் நோய் தொற்று 14 அல்லது 15 நாட்களில் இரட்டிப்பாவதால் இன்னும் இரண்டு வாரத்தில் 56000 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படகூடும் என்று தெரிவித்தார், தற்போது பாதிப்பு 29000 ல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.