டில்லி,

ணமதிபிழப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை ரூ.562 கோடி கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.

பணம் மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து ஜனவரி 1ந்தேதி வரை 562 கோடி ரூபாய் கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது

நடந்த நவம்பர் 8ந்தேதி முதல் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தது மத்திய அரசு. கருப்பு மற்றும் கள்ளப்பணத்தை தடுக்கவும், பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜனவரி ஒன்றாம் தேதி வரை வருமான வரித் துறையினர் நடத்திய சோதனை களின் வாயிலாக சுமார் 562 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதில், ரூ.110 கோடி புதிய நோட்டுகளாகும்.

ஜனவரி ஒன்றாம் தேதி வரை கணக்கில் காட்டப்படாத மொத்த வருமானம் ரூ.4,663 கோடி வருமான வரித் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சுமார் 5062 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கைக்கு பிறகு இதுவரை 1100 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் 556 ஆய்வுகளும், 253 சோதனைகளும், 289 பறிமுதல்களும் நடைபெற்றுள்ளன.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.