புதுச்சேரி: விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி பிரமாண்ட பரதநாட்டியம்

--

புதுச்சேரி,
புதுச்சேரியில், விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், கின்னஸ் சாதனை முயற்சியாகவும்  ஒரே இடத்தில் 5ஆயிரத்து 625 பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி லாஸ்பேட்டையிலுள்ள தனியார் கலை கல்லூரி மைதானத்தில் இந்த பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதற்காக  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும்  பரத நாட்டிய கலைஞர்கள் புதுச்சேரியில் முகாமிட்டிருந்தனர்.

5 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் மற்றும் திருநங்கைகளும் சேர்ந்து மொத்தம் 5,625 பேர் பரத நாட்டிய ஆடைகளுடன் அழகாக கலந்துகொண்ட பிரமாண்ட பரதநாட்டியம் நடைபெற்றது. சுமார் 26 நிமிடம் 2 விநாடிகளில் அனைவரும் ஒரு நேர நடனம் ஆடினர். இது பார்ப்போரை பரவசப்படுத்தியது.

இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் கூறும்போது, நாட்டில் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், அதே நேரத்தில் கின்னஸ் சாதனைக்காகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.