கடந்த 24 மணிநேரத்தில் 567 பேர் பலி: கொரோனாவின் கடும் பாதிப்பில் ஸ்பெயின்
மாட்ரிட்: ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரசுக்கு 567 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று 200க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவியுள்ளது. அதனால் அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இந் நிலையில் ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில், 567 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து, அந்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 17,756 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 19,25,384 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,19,718 பேர் கொரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.