தமிழகத்தில் இன்று மட்டும் 5693 பேருக்கு கொரோனா: 5 லட்சத்தை கடந்த ஒட்டுமொத்த பாதிப்பு

--

சென்னை: தமிழகத்தில் இன்று 5,693 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையை சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. அதன்படி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 5,693 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது: இன்றைய பாதிப்புடன் சேர்த்து, தமிழகத்தில் இதுவரை கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5,02,759 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா பாதிப்புக்கு 74 பேர் உயிரிழக்க, மொத்த பலி எண்ணிக்கை 8,381 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சிகிச்சையில் இன்னமும் 47,012 பேர் உள்ளனர். இன்று மட்டும் 5,717 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட,  ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,47,366 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 994 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிற மாவட்டங்களில் 4,699 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இன்று மட்டும் 82,387 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.