விழுப்புரத்தில் பரபரப்பு: 57 பெண் போலீசுக்கு கொரோனா..

விழுப்புரம் மாவட்டம் மைலம் என்ற இடத்தில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது.
அண்மையில் புதிதாக போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட 269 பேருக்கு அந்த பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.


இங்கு பயிற்சி பெறும் 3 பெண் போலீசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், எஞ்சிய பயிற்சி காவலர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதில், 57 பெண் பயிற்சி காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால், அவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் 57 பெண் பயிற்சி காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அந்த பயிற்சி பள்ளி மூடப்பட்டு விட்டது.
-பா.பாரதி.

கார்ட்டூன் கேலரி