சென்னை:

டந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரியில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.570 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்த வழக்கில், திருப்பூரில் கண்டெய்னர் லாரியில் சிக்கிய ரூ.570 கோடி பணம் வங்கிக்கு சொந்தமானது என சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.

திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது திருப்பூரில் கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பணம் சிக்கியது.

இந்த பணம கரூரை சேர்ந்த தொழிலதிபர் அன்புநாதனுக்கு சொந்தமானது என்றும், முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமானது எனவும் பல்வேறு யூகங்கள் கிளம்பியது.

இதற்கிடையில், கண்டெய்னர்களில் உள்ள பணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான என வங்கி நிர்வாகம் அறிவித்தது.

ஆனால், அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர் , உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதைத் தொடர்ந்து இந்த  விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், திருப்பூர் அருகே கைப்பற்றப் பட்ட பணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என தெரிவித்துள்ளது.