புதுச்சேரி: மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இன்று  571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இன்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில  சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், புதுச்சேரியில்  நேற்று 1,327 பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 529 பேர், காரைக்காலில் 36 பேர், ஏனாமில் 6 பேர் என மொத்தம்  571 பேருக்குத் (43.03 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சோதனை செய்யப்பட்ட 100 பேரில்  43 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  அவர்களில் 3 பேர் ஜிப்மரிலும்,  இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 2 பேரும், ஏனாம் அரசு பொது மருத்துவமனையிலும்  2 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.   இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.51 சதவீதமாக உள்ளது.

மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை,  11 ஆயிரத்து 426 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், புதுச்சேரியில் 1,975 பேர், காரைக்காலில் 57 பேர், ஏனாமில் 42 பேர் என 2,074 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில்,  புதுச்சேரியில் 1,735 பேர், காரைக்காலில் 127 பேர், ஏனாமில் 43 பேர், மாஹவில் 2 பேர் என மொத்தம் 1,907 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை, புதுச்சேரியில் 314 பேர், காரைக்காலில் 1 ஒருவர், ஏனாமில் 16 பேர் என மொத்தம் 331 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,273 (63.65 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 65 ஆயிரத்து 769 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களில்  52 ஆயிரத்து 857 பரிசோதனைகள் முடிவில் ‘நெகட்டிவ்’ என்று வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.