கடந்த 24 மணி நேரத்தில் 57,117 பேர்,  இந்தியாவில்  கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்கியது…

 சென்னை:

ந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 57,117 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 17 லட்சத்தை நெருங்கி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  இந்தியாவில் 24 மணி நேரத்தில் 57,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,95,988 ஆக உயர்ந்துள்ளது.

24 மணி நேரத்தில் மட்டும் சிகிச்சை பலனின்றி 764 கொரோனா நோயாளிகள்  உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,511 ஆக அதிகரித்திருக்கிறது.

அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,94,374 ஆகவும் உயர்ந்துள்ளது.

தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5,65,103 உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று வரையில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,93,58,659 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ள தாகவும், அதில் நேற்று மட்டும் 5,25,689 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன எனவும்  ஐ.சி.எம்.ஆர்  குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி