டில்லி:
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 58ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் போர் விமானங்கள் வாங்க இந்தியா – பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 58ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில்  36 நவீனரக ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா – பிரான்ஸ் இடையே ஒப்பந்தம்  இன்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும், பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் லீ டிரியனும்  கையெழுத்திட்டனர்.

36 மாதங்களில் இருந்து 66 மாதங்களுக்குள்  இந்த  விமானங்கள் ஒப்படைக்கப்படும்.  இந்த விமானங்கள், சக்திவாய்ந்த ஏவுகணைகளை சுமந்து எதிரியின்  இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
இந்தப் போர் விமானங்கள் இந்திய விமானப்படையின் தேவைக்கேற்ப வடிவமைத்து தரவும் பிரான்ஸ் நாட்டின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனம் இன்றைய ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ளது.
இது கடந்த 20 ஆண்டுகளில் ஜெட் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான முதல் ஒப்பந்தம் இதுவாகும்.