சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன என்பது குறித்து, தமிழக தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச்செயலாளர் சண்முகம், தமிழகத்தில் இன்று புதியதாக 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், அதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஈரோட்டில் முதியவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு 10ஆக உயர்ந்துள்ளது என்றார்.

தமிழகத்தில் இதுவரை  9527 பேருக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

485 பேரின் முடிவுக்கு காத்திருக்கிறோம்.

கண்காணிப்பில் உள்ளோர் எண்ணிக்கை 47,056

கொரோனா சோதனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் உள்ளது என்றவர், தமிழகத்திற்கு இன்னும் கொரோனா கிட் வரவில்லை என்றார். அந்த கிட் தவறுதலாக அமெரிக்காவுக்கு சென்றுவிட்டதாகவும், விரைவில் தமிழகத்திற்கு வரும் என்றவர், அது  கிடைத்ததும், தனிமைப்படுத்துதலில் இருப்பவர்கள் அனைவருக்கும் சோதனை செய்யப்படும் என்றார். இதன் மூலம் ஒருவரின் ஆன்டிபாடி எவ்வளவு என்பது குறித்து 20 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியும் என்றார்.

தமிழகத்தில் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை  வைத்ததாக கூறியவர்,  பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்  என்றும் தெரிவித்தார்.

ஊரடங்கு குறித்து பிரதமர் அறிவிக்கும் முடிவை ஏற்று தமிழகம் பின்பற்றும் என்றும் கூறினார்.