5,915 பி.இ., சீட் காலி

மும்பை:

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி மற்றும் மத்திய அரசு நிதியுதவி பெறும் கல்வி உள்பட பல பொறியியல் கல்லூரிகளில் 5,915 இடங்கள் காலியாக உள்ளது.

தற்போது வரை 6 சுற்று மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில் இந்த நிலை நீடிக்கிறது. தற்போது 7வது சுற்று மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. பிரபலமான கம்ப்யூட்டர் சியின்ஸ் மற்றும் தொழில்நுட்ப பாடப்பிரிவில் கூட 25 இடங்கள் ஐ.ஐ.டி.க்களில் காலியாக உள்ளது.

இந்தோர், பாட்னா, கோவா, ஜம்முல தார்வாத், ஜோத்பூர் ஐஐடி.க்களில் 56 எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் காலியாக உள்ளது. பாம்பே ஐஐடி.யில் ஒரு சிவில், டெல்லி ஐஐடி.யில் ஒரு சிவில், போவை வளாகத்தில் ஏரோஸ்பேஸ் பாடப்பிரிவில் 2 இடங்கள் காலியாக உள்ளது.

சென்னை ஐஐடி.யில் 7வது சுற்று சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் 20 இடங்கள் காலியாக உள்ளது. அதிக இடங்கள் வாரனாசி ஐஐடி.யில் தான் காலியாக உள்ளது. கடந்த ஆண்டு நடந்த கவுன்சிலிங் இறுதி கட்டத்தில் 73 இடங்கள் காலியாக இருந்தது.

இதில் வாரனாசியில் 38 இடங்களும், என்ஐடி.க்களில் 1,518 இடங்களும் காலியாக உள்ளது. இவை பெரும்பாலும் மாநில இடஒதுக்கீட்டிற்காக இடங்களே என்பது குறிப்பிடத்தக்கது.