தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 97 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 21 நாட்களில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து பதிவானது. ஆனால், கடந்த 2 நாட்களாக 100க்கும் கீழே பதிவாகி இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,79,385 ஆக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,298 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஆகையால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,25,389 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது.

இந் நிலையில், இன்று 97 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,517 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 97 பேரில், தனியார் மருத்துவமனையில் 21 பேரும், அரசு மருத்துவமனையில் 76 பேர் பலியாகி உள்ளனர்.