இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை: ரவிசங்கர் பிரசாத்

புதுடெல்லி: 5ஜி சேவை இந்தியாவில் விரைவில் துவங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

அவர் அளித்தப் பேட்டியில் கூறியதாவது, “இந்தியாவில் நாளுக்குநாள் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு அதிகரித்து வருவதோடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செல்‍ஃபோன் சேவைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

எனவே, இந்த வளர்ச்சிக்கு ஏற்றவகையில், தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த அரசின் சார்பில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இதன்தொடர்ச்சியாக இந்தியாவில் 5ஜி சேவை வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும்” என்றார் அமைச்சர்.

டிராய் அமைப்பின் செயலாளர் குப்தா, “அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் டிஜிட்டல் தள இணைப்புகள் பன்மடங்கு பெருகிவிடும்” என்று தெரிவித்தார்.