புதுடெல்லி: இந்தியாவில் 5 ஜி வெளியீடு, மோசமான துறை ஆரோக்கியம் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தின் பணமாக்குதலின் கணிக்க முடியாத தன்மை ஆகியவற்றால் எதிர்பார்த்ததை விட அதிக காலம் ஆகக்கூடும் என்று மூத்த தொழில்துறை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செவ்வாயன்று இந்தியா மொபைல் காங்கிரசில் குழு விவாதத்தையடுத்து இது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளரும் இலக்கை அடைய உதவும் ஒரு முக்கிய காரணியாகும் எனக் கூறப்பட்டது.

“ஐபி நெட்வொர்க்குகள் மற்றும் வோல்டிஇ ஆகிய 5ஜி க்கான இரண்டு அடிப்படை அம்சங்களை உருவாக்குவதில் இந்தியா மிகவும் பின்தங்கியிருப்பதாகவும் மேலும் அதற்கு கணிசமான முதலீடு தேவைப்படும்“, என்றும் ரிலையன்ஸ் ஜியோவின் நெட்வொர்க்குகள் தலைவர் மேத்யூ உம்மன் கூறினார்.

நோக்கியா இந்தியாவின் தலைவர் சஞ்சய் மாலிக், 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் 5 ஜி வெளியீட்டை எதிர்பார்ப்பதாகக் கூறினார். இருப்பினும், அத்துறையின் ஆரோக்கியத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றார்.