டில்லி,

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான ஐந்தாம் தலைமுறை  (5ஜி) அலைக்கற்றை ஏலத்தை இந்த ஆண்டில் நடத்த மத்திய  அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டில் தற்போது 2ஜி, 3ஜி, 4ஜி சேவை வசதிகளை தொலைதொடர்பு நிறுவனங்கள் வாடிக்கை யாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது அடுத்த தலைமுறை அலை வரிசையான 5ஜி சேவையை வழங்க ஏதுவாக இந்த ஆண்டுக்குள் ஏலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

3,000 மெகா ஹெர்ட்சுக்கும் மேற்பட்ட அலைவரிசை கொண்ட ஐந்தாம் தலைமுறை அலைக் கற்றைகளை முதன்முறையாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்க ளுக்கு ஏலம்விட அரசு திட்ட மிட்டுள்ளது. இது தொடர்பான கோப்பைத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்குத் தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுப்பியுள்ளது.

3,300 மற்றும் 3,400 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை கொண்ட இந்தக் கற்றைகள் மூலம் அதிகத் துல்லியம் கொண்ட படக்காட்சிகளை உடனடியாக அனுப்பவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.

ஐந்தாம் தலைமுறை (5G) அலைக்கற்றை ஏலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தத் திட்ட மிடப்பட்டுள்ளது. ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் 2020ஆம் ஆண்டில் இதன்மூலம் வாடிக்கை யாளர்களுக்குத் தகவல் தொடர்பை அளிக்க முடியும்.