டில்லி:

ந்தியாவில் இந்த வருடத்துக்குள் 5ஜி தொழில் நுட்பத்தை அறிமுகப்டுத்த உள்ளதாக ஹவாய் நிறுவனர் அறிவித்துள்ளது.

ஹவாய் நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரியான ஜே சென் செய்தியாளர்களிடம் பேசும்போது இதை தெரிவித்தார்.  மேலும், அவர் தெரிவித்ததாவது:

எங்களது ஹவாய் நிறுவனம், 5ஜி தொழில் நுட்பத்தை அறிமுகப்டுத்துவதுகுறித்து இந்தியாவில் உள்ள முன்னணி நெட் ஒர்க் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பாரதி ஏர்டெல் நிறுவனம் மிகவும் ஆர்வம் காட்டியுள்ளது.

இதனால், 5ஜி தொழில்நுட்பத்தின் அங்கமான MIMO (மல்டிபிள் இன் மல்டிபிள் அவுட்) தொழில்நுட்பம் இந்தாண்டிலேயே இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உரிமையை ஹவாய் நிறுவனம் பெற்றுள்ளது

இந்தியாவில் கிட்டத்தட்ட 13 வட்டாரப்பகுதிகளில் ஹவாய் நிறுவனம் ஏற்கனவே 4.5ஜி தொழில்நுட்ப சேவையினை செயல்படுத்தி வருகிறது இவற்றை மேம்படுத்தி 5ஜியாக மாற்ற முடியும். 5ஜியின் வேகமானது நொடிக்கு 1000 எம்.பியை வரை இருக்கும்” என்று ஜே சென் தெரிவித்துள்ளார்.