5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

சென்னை:

மிழகத்தில் இந்த ஆண்டுமுதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

ஆரம்பத்தில் 5வது மற்றும் 8வது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்று கூறி வந்த அமைச்சர் செங்கோட்டையன், நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது,  மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவே 5, 8ம்  வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில்  எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.

இந்த நிலையில், தற்போது  5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, 5ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

8 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 30ம் தேதி துவங்கி, ஏப்ரல் 17ஆம் வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

You may have missed