அதிரடி காட்டிய ஜடேஜா: 104 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெ.இண்டீஸ்

இந்தியாவிற்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் 104 ரன்களை மட்டுமே எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிக்கொடுத்தது. 105 என்ற சொற்ப ரன்னையே இந்திய அணிக்கு இலக்காக வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணையித்துள்ளது.

105

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கேரளாவின் திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதற்கு முன்பு நடைபெற்ற 4 போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் ஒரு போட்டியிலும் வெற்றிப்பெற்ற நிலையில் ஒருபோட்டி சமனில் முடிந்தது. இந்த தொடரில் 2-1 என்ற நிலையில் இந்திய அணி முன்னிலை வகித்தது.

இதையடுத்து இந்த போட்டியில் தொடரை கைப்பற்றும் முனைப்போடு இந்திய அணி களமிறங்கியுள்ளது. முதல் ஓவரிலேயே புவனேஸ்குமாரின் அசத்தல் பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்ட வீரர் கிரண் பவுல் விக்கெட்டை பறிக்கொடுத்தார். அடுத்த ஓவரிலேயே பும்ராவின் அருமையான பந்து வீச்சில் மற்றுமொரு வீரர் சாய் ஹோப் வெளியேறினார். தொடர்ந்து ஜடேஜா, கலீல் அஹமது விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டை பறிக்கொடுத்தது. 31.5 ஓவரில் பந்து வீசிய ஜடேஜா அடுத்தடுத்து 2விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 105 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ரவீந்திர ஜடேஜா 4விக்கெட்டுகளையும், கலீல் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சொற்ப இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.