விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கை மீறி, எந்தவித பாதுகாப்பும் மேற்கொள்ளப்படா மல்  இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடினார். அதுவும் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி அதகளம் செய்தனர். இந்த வீடியோ வைரலான நிலையில், அந்த புள்ளிங்கோக்கள் தற்போது சிறைக் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர்..

விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது பிறந்தநாளை அவரது நண்பர்கள் பலர் சேர்ந்து,  அந்த கிராமத்தில் உள்ள ராஜபாளையம் தெருவில் ஒன்று கூடி பட்டாக்கத்தியைக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

யாரும் ஊரடங்கு குறித்து கவலைப்படாமல், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பிறந்தநாளை அதக்களப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனை  கண்ட அரகண்டநல்லூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்ட ஐந்து புள்ளிங்கோக்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ரவுடி பினு, பட்டாக்கத்தியால் கெட் வெட்டியதைத் தொடர்ந்து, சமீப காலமாக தமிழகத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டும் கலாச்சாரம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. காவல்துறை இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், விரைவில் விபரீதமாகும் வாய்ப்பு உருவாகிவிடும்.