6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இடை நீக்கம்  செல்லாது:  உச்சநீதி மன்றம் தீர்ப்பு 

download

ட்டசபையில் சபையின் மரபுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக  தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், தினகரன், சந்திரகுமார், பார்த்திபன், மோகன்ராஜ், சேகர் ஆகிய ஆறு பேரை, கடந்த 2015–ம் ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதி தமிழக சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

சபாநாயகரின்  இந்த  உத்தரவை எதிர்த்து பார்த்திபன், மோகன்ராஜ் உள்பட 6 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.  நீதிபதிகள் ஜெலமேஸ்வர், ஏ.எம். சாப்ரே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.  “6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவு செல்லாது. சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்கிறோம்”  என்று  நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

சஸ்பெண்ட் உத்தரவானது எம்.எல்.ஏ.க்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கப்படக் கூடியது. விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.