xplay
6 ஜிபி ராம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட் போன்

டெல்லி:
மார்ச் 1ம் தேதி சீனாவில் 6 ஜிபி ராம் கொண்ட ஸ்மார்ட் போன் சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தற்போது 4 ஜிபி ராம் கொண்ட ஸ்மார்ட் போன்கள் மட்டுமே உலகளாவிய சந்தையில் உள்ளது. சீனாவின் ‘விவோ’ நிறுவனம் 6 ஜபி ராம் கொண்ட ஸ்மார்ட் போனை வரும் மார்ச் 1ம் தேதி சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.
‘எக்ஸ் ப்ளே 5’ என்று பெயரிட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் தான் சந்தையில் உயர் ஜிபி ராம் கொண்ட போனாக இருக்க போகிறது. இதை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த போன் ‘ஸ்னாப்டிராகன் 820 பிராசசர்’ இடம்பெறவுள்ளது.
சாம்சங் போன்களில் இருப்பது போல் முன் திரையில் எல்லைப் பகுதி வளைந்து காணப்படும். மேலும், இந்த போனில் சோலார் சார்ஜிங் வசதி இருக்கும் என்றும், 6 இஞ்ச் டிஸ்ப்ளே, 16 எம்பி கேமிரா, 8 எம்பி முன் பக்க கேமிரா, 4,300 எம்ஏஎஹச் பேட்டரி, ஆந்த்ராய்டு மார்ஷலோ ஆகியவை இடம்பெறும் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்ததாக சீனாவில் லீகோ நிறுவனமும் இதே கொள்ளளவு திறன் கொண்ட ஸ்மார்ட் போனை தயார் செய்வதாக பேச்சு அடிபடுகிறது. இதேபோல் சாம்சங் நிறுவனமும் 6 ஜிபி ராம் கொண்ட ஸ்மார்ட் போன் தயாரிக்கப்படும் என சமீபத்தில் அறிவித்துள்ளது.