தமிழகம் : ஊரடங்கு விதிகளை மீறிய 6.3 லட்சம் வாகனம் பறிமுதல், ரூ. 17.84 கோடி அபராதம்

சென்னை

மிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 6,30,662 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது.

அதையொட்டி மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களில் பலர் ஊரடங்கு உத்தரவை மீறி வருகின்றனர்.

அவ்வகையில் மாநிலம் முழுவதும் இது வரை 6,30,462 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 8,41,230 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வந்துள்ளனர்.

இதுவரை 7,66,717 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 ஊரடங்கு விதிகளை மீறியதற்காக இதுவரை ரூ. 17,84,47,876 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.