உறங்குவதில் விழிப்புணர்வு தேவை!

ல்லா விசயங்களிலும் மனிதர்களுக்கு விழிப்புணர்வு தேவை. அதிலும் தங்களது உடலை பராமரிப்பதில் விழிப்புணர்வு மிக அவசியம் அல்லவா.

ஆனால் இந்தியர்கள், தங்கள் உடல் நலத்தில் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை என்கிறது ஒரு ஆய்வு.

Tired young man sleeping with his head on a laptop

ஃபிட்பிட் என்ற உடல்நல ஆலோசனை வழங்கும் நிறுவனம்  உலக அளவில்  இது குறித்து ஆய்வு நடத்தியது. இதில்18 நாடுகளைச் சேர்ந்த மக்கள், தங்கள் உடல் நலத்தில் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பது தெரியவந்திருக்கிறது. குறிப்பாக தங்கள் உடலுக்கு போதிய ஓய்வு அளிப்பதில்லைாயம். அதாவது இவர்கள் உறங்கும் நேரம் மிகக் குறைவாக இருக்கிறதாம்.

இதில் முதலிடம் பெறுபவர்கள் ஜப்பானியர்கள். இவர்கள் நாளொன்றுக்கு, சராசரியாக, 6.35 மணிநேரம் மட்டுமே உறங்குகிறார்களாம். அடுத்த இடத்தில் இருப்பவர்கள்.. அட, நம்ம இந்தியர்கள்தான்.

“இந்தியர்கள், நாள் ஒன்றுக்கு 6.55 மணிநேரம் மட்டுமே உறங்குகிறார்கள்” என்கிறது இந்த ஆய்வு. “இந்தியர்களிடையே உடல்நலம் பராமரிப்பதில் போதிய அக்கறை இல்லை” என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் இங்கிலாந்து ,நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய மக்கள். இவர்கள் நாட்டின் மக்கள் சராசரியாக, நாள்தோறும் 7 மணிநேரத்திற்கும் மேலாக உறங்குகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டினர்தான்  உலக அளவில், அதிக நேரம் அதாவது, 8 மணிநேரத்திற்கும் மேலாக, உறங்குகிறார்களாம்.

ஆக, இந்தியர்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்று யாரும் சொல்ல முடியாது” என்றும் இந்த செய்தியை முடிக்கலாம். அல்லது, உறக்க விசயத்தில் இந்தியர்களுக்கு விழிப்புணர்வு தேவை என்றும் முடிக்கலாம்!

Leave a Reply

Your email address will not be published.