சிலி:
தெற்கு சிலி கடற்கரை பகுதியில் நேற்று வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் பல நகரங்களில் அதிர்வு ஏற்பட்டிருந்தாலும், எந்த சேதமும் ஏற்படவில்லை என்று சிலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோரல் நகரத்திற்கு மேற்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இந்த நிலநடுக்கத்தின் ஆரம்ப அளவு 6.8 ஆக இருப்பதாகவும், அதன் மையப்பகுதி மேற்பரப்பிற்கு அடியில் 10 கிலோ மீட்டருக்கு இருப்பதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் சுனாமி உருவாகும் பண்புகள் கொண்டவையாக இல்லை, ஆகவே மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்று சிலியின் கடற்படை தெரிவித்துள்ளது.
சிலியின் தேசிய அவசரகால அலுவலகம், இதுவரை எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அடிப்படை சேவைகள் அனைத்தும் சாதாரணமாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது.